நாவலப்பிட்டிய உயர் தொழில்நுட்ப கல்லூரி 03 ஆம் திகதி திறப்பு!

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேவின் எண்ணக்கருவுக்கமைய ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் 450 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, 2000 மாணவர்கள் கற்பதற்கான வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாவலப்பிட்டி தொழில்நுட்ப நிறுவனம், இலங்கையின் இளைஞர்களுக்காக சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ உயர் தேசிய டிப்ளோமா, தகவல் தொழில்நுட்ப உயர் தேசிய டிப்ளோமா, ஆங்கில மொழி உயர் தேசிய டிப்ளோமா உள்ளிட்ட பல பாடநெறிகளை வழங்குகிறது.
ரம்மியமான சூழலில் அமைந்துள்ள இந்த உயர் தொழில்நுட்பக் கழகத்தின் நிர்மாண பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
டிசம்பர் 3 ஆம் திகதி முதல், நாடளாவிய ரீதியிலிருக்கும் அனைத்து இளைஞர்களும் உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் தமது பாடநெறியை ஆரம்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles