நாவலப்பிட்டிய விபத்தில் குடும்பஸ்தர் பலி!

நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் நடைபெற்ற விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் பலியாகியுள்ளார்.

நாவலப்பிட்டி,பவ்வாகம- புதிய தேசிய வீடமைப்பு பகுதியைச் சேர்ந்த எஸ்.பி. ஹேரத் (வயது – 59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டியில் இருந்து கொத்மலை நோக்கி பயணித்த வேன் ஒன்று குறுக்கு வீதியில் நுழைய முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அப்போது, ​​குறித்த நபர் வேனின் கண்ணாடியில் மோதி கீழே விழுந்து பின்னர் வேனில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் நாவலப்பிட்டி-பவ்வாகம- புதிய தேசிய வீடமைப்பு வளாகத்தில் வசித்து வந்த எஸ்.பி. ஹேரத் என்ற 59 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

Related Articles

Latest Articles