நிதி அமைச்சின் செயலாளர், அரச அச்சகமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டமொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
உள்ளாட்சிசபைக்கான தேர்தல் திகதியை நிர்ணயிப்பதற்காகவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதில் நிதி அமைச்சு இழுத்தடிப்பு செய்தது. எனினும், நிதி வழங்கலை தடுக்க கூடாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மேற்படி மூவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.