நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஹட்டன் பொலிஸாரால் கைது!

ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில், ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பதுளை, கந்தேகெதர பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை ஏமாற்றி, கவர்ச்சிகரமான வட்டிக்கு பணம் தருவதாக பேஸ்புக்கில் விளம்பரம் செய்து, சுமார் 4.5 மில்லியன் ரூபாவைப் பெற்று, பணத்தை செலுத்தாமல் தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிஷாந்தன்

Related Articles

Latest Articles