நிமோனியா காய்ச்சலில் உயிரிழந்த ஒருவரின் நுரையீரல் இருந்து பல்லொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை வலேபொட பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய கருணாரத்ன என்பவரே இவ்வாறு நிமோனியாவில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை இன்று பலாங்கொடை வைத்தியசாலையில் நீதிமன்றத்துக்கான வைத்திய அதிகாரி (சேத்தி சத்யா) முன்னிலையில் அவசர மரண பரிசோதகர் பத்மேன்தர விஜயதிலக்கவால் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது உயிரிழந்தவரின் நுரையீரலில் இருந்து பல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
எம்.எப்.எம். அலி










