” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்குரிய சந்தர்ப்பம் உதயமாகியுள்ளது. அதனை சரிவர பயன்படுத்தி வழங்கிய உறுதிமொழியை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க வலியுறுத்தினார்.
” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவேன் என உறுதியளித்தே சந்திரிக்கா இரு தடவைகள் ஆட்சிக்கு வந்தார். மஹிந்தவும் அந்த உறுதிமொழியையே வழங்கினார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு மேற்படி தரப்புகளுக்கு ஜே.வி.பியினர் ஆதரவு வழங்கினர்.
எனவே, அநுரகுமார திஸாநாயக்கவே இந்நாட்டின் கடைசி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருக்க வேண்டும்.” – எனவும் ஆசுமாரசிங்க குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் உள்ளன. அதனை சரிவர பயன்படுத்தி அரசியலமைப்பு மாற்றத்தை செய்ய வேண்டும். இது தொடர்பில் தற்போது கருத்தாடல் இல்லை. எனவே, கருத்தாடலை நாம் ஆரம்பிக்க வேண்டும். அரசாங்கமும் வழங்கிய வாக்குறுதியை மறந்து செயற்படக்கூடாது.” – எனவும் ஆசுமாரங்க சுட்டிக்காட்டினார்.