ஈலோன் மஸ்க்கின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட ரொக்கெட் ஒன்று நிலவில் மோதி வெடிக்கும் பாதையில் பயணித்து வருகிறது.
2015 ஆம் ஆண்டு ஏவப்பட்ட போல்கோன் 9 பூஸ்டர் ரொக்கெட் தனது திட்டத்தை பூர்த்தி செய்த பின் பூமிக்குத் திரும்புவதற்கு போதுமான எரிபொருள் இல்லாத நிலையில் விண்வெளியிலேயே தங்கியுள்ளது.
இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த ரொக்கெட் ஒன்று நிலவில் மோதவிருப்பது இது முதல்முறை என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இதன் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஒரு மில்லியன் மைல் பயணத்தில் விண்வெளிக்கு வானிலை செய்மதி ஒன்றை அனுப்பிய பின் இந்த ரொக்கெட் ஏழு ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் உள்ளது.
இந்நிலையில் இந்த ரொக்கட் நிலவில் மோதும் நிகழ்வு வரும் மார்ச் 4 ஆம் திகதி இடம்பெற வாய்ப்பு உள்ளது.