நிழல் உலக தாதா கொஸ்கொட தாரக பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலி!

பாதாள கோஷ்டி தலைவரான கொஸ்கொட தாரக என்றழைக்கப்படும் தாரக பெரேரா விஜேசேகர இன்று (13) காலை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு அதிகாரிகளினால் இவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று (13) அதிகாலை மீரிகம, ரேந்தபொல பிரதேசத்திற்கு விசேட நடவடிக்கை ஒன்றிக்காக அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

இதன்போது கொஸ்கெட தாரக பொலிஸார்மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளார். பதிலுக்கு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.

குறித்த சம்பவத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், அவர் வத்துபிடிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் மரணம் தொடர்பாக விசேட விசாரணை ஒன்று மேல் மாகாண வடக்கு பிரதி பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறவுள்ளது.

கொஸ்கெட தாரக கொஸ்கொட, மாத்தறை, மொரடுவை மற்றும் கொட்டாவை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற 7 கொலைகள் மற்றும் 21 கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபராவார்.

Related Articles

Latest Articles