துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பாதாள குழு தலைவரான மாகந்துரே மதுஷின் ஆசை நாயகி, நுவரெலியாவில் மாகாஸ்தொட்ட பகுதியில் தங்கியிறுந்த வாடகை வீட்டை முற்றுகையிட்ட நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸார், (21.12.2023) இரவு சோதணையிட்டுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கை நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாகாஸ்தொட்ட விஜதபுற எனும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டதாக நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த (20.12.2023) புதன் கிழமை நுவரெலியா குற்ற புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி
ஆர். எஸ் ராஜசிங்கவுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த வீட்டிலிருந்து
நவீன ரக கார் ஒன்றும், 37 லட்சம் ரூபா பணமும், பெறுமதி அளவிட முடியாத 91 மாணிக்க கற்கள், மேலும் தங்க நகைகள் ஆகியவற்றுடன் 05 கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த ஹக்மன மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன் ஜயசுந்தர அவர்களின் ஆலோசனையின் பிரகாரம், நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி பிரேமலால், மற்றும் குற்ற புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.எஸ் ராஜசிங்க மற்றும் ஜெயசேகர அவர்களின் தலைமையிலான பொலிஸ் குழு இந்த சோதணை நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக நுவரெலியா குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ஆர். எஸ் ராஜசிங்க தெரிவித்தார்.
எனினும் இந்த சோதனை நடவடிக்கையில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நானுஓயா நிருபர்