” நாட்டில் நீதித்துறையை பாதுகாக்க வேண்டிய
முக்கிய பொறுப்பு நாட்டின் ஜனாதிபதிக்கு உள்ளது. அதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும்.” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி பதவி விலகியுள்ளமை, நீதித்துறை சுயாதீனம் தொடர்பில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.
