நீதிமன்றங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்!

நீதிமன்றங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு வருகைதந்தவேளையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

நீதிபதிகள், சட்டத்தரணிகள் உட்பட அனைவரினதும் பாதுகாப்பு முக்கியம். எனவே, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles