நீராடச் சென்ற பாடசாலை மாணவன் உயிரிழப்பு

நொச்சியாகம, கலா ஓயாவில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை (01) குறித்த மாணவன் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாலியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன் சில நண்பர்களுடன் கலா ஓயாவிற்கு அருகில் உள்ள தேவாலயத்திற்கு செல்வதாக பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளது.

கலாஓயில் நீராடச் சென்ற வேளையில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles