நீரில் மூழ்கி நான்கு மாணவர்கள் பலி!

அலவ்வ – வலகும்புர மாஓயாவில் மூழ்கி நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

14 வயதான நான்கு சிறுவர்களே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.

நண்பர்கள் ஐவர் மாஓயாவில் குளிப்பதற்காக சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

நீரில் மூழ்கிய ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

அலவ்வ மற்றும் பொல்கஹவெல பகுதிகளை சேர்ந்த நால்வரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles