நாவலப்பிட்டிய, கலபொட நீர்வீழ்ச்சியில் மூழ்கி 15 வயது மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
நண்பர்கள் சகிதம் குளித்துக் கொண்டிருந்தபோதே குறித்த மாணவன் நீரில் மூழ்கியுள்ளார்.
கடும் போராட்டத்துக்கு மத்தியில் மீட்கப்பட்டு அவர் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாலும், உயிரிழந்துள்ளார்.
கடுகன்னாவ, பானபொக்கவை சேர்ந்த பசிந்து சமோத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
நாவலப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர் .