நீர் மட்டம் சடுதியாக அதிகரிப்பு! வான் பாய்கிறது காசல்ரீ நீர்த்தேக்கம்!!

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கம் முழுமையாக நிரம்பி மேலதிக நீர் 18.12.2023 அன்று இரவு முதல் வான் மேவி பாய்கின்றது.

இதனால் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதோடு, களனி ஆற்றை பயன்படுத்துபவர்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதே வேளை நோர்ட்டன்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமல சுரேந்திர நீர்த்தேக்கப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதானால் அந்த நீர்த்தேக்கத்தில் ஆறு கதவுகள் ஊடாக நீர் வான்பாய்கின்றன.

எனவே நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

இந்த மழை காரணமாக கெனியன், லக்ஷபான, நவ லக்ஷபான, பொல்பிட்டிய, மவுஸ்ஸாக்கலை, மேல் கொத்மலை ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், வான்கதவுகளும் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles