வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்த நிலைமைகளை கையாள்வது தொடர்பான விசேட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
எதிர்வரும் பருவமழையுடன் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளுக்கு நிறுவனங்களை தயார்படுத்துவதற்கும், நிறுவனங்களின் செயற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்துவதற்கும், நுவரெலியா மாவட்டத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இங்கு மேற்கொள்ளப்பட்டது.
நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் நிமல் பண்டார, நுவரெலியா, வலப்பனை, ஹங்குரான்கெத்த, கொத்மலை, தலவாக்கலை, நோர்வூட், அம்பகமுவ பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தலவாக்கலை பி.கேதீஸ்