நுவரெலியா உட்பட அதனை சூழவுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவிவருகின்றது.
கடந்த சில நாட்களாகவே இந்நிலைமை காணப்படுகின்றது.
கடும் பனிமூட்டம் நிலவுவதால் சாரதிகள் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளனர். முன்னோக்கி செல்லும் வாகனங்களை உரிய வகையில் அவதானிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
எனவே, சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா நகர எல்லை , ஹவாஎலிய, பொரலந்த , உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதி, நானுஓயா, தலவாக்கலை – ஹட்டன் பிரதான வீதி, நானுஓயா ரதல்ல குறுகிய வீதி போன்ற பகுதிகளில் இந்த அடர்ந்த பனிமூட்டம் மற்றும் வீதியில் போனிகல் குதிக்கும் அபாயம் உள்ளதால், மிகக் குறைந்த வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறும் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
வி .தீபன்ராஜ்