நுவரெலியா மாவட்டத்தில் கடந்த நாட்களில் பெய்த கன மழையினால் காய்கறி பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பல விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக காய்கறி பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வருமான இழப்பை சந்திக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதுதொடர்பில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில்,
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த காய்கறி செய்கை தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தையின் தேவைக்கு குறைவான அளவில் காய்கறிகளை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையால் காய்கறிகளின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இதன்போது சுட்டிகாட்டினர்.
அதுமட்டுமின்றி உற்பத்தி செலவுகளை சரிசெய்ய வழி இல்லாமல் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும், விவசாயிகளின் இழப்பீட்டை மதிப்பீடு செய்து அவர்களுக்கு இழப்பீட்டை வழங்க உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர்.