நுவரெலியாவில் நண்பகல் 12 மணிவரை 40 சதவீத வாக்கு பதிவு!
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.
நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 40% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி / மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் மாலை வேளையில் சீரற்ற காலநிலை இருக்கும் என்பதால் காலை வேளையிலேயே மக்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கவும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.