” நுவரெலியா தபால் நிலையம் சுற்றுலாத் துறைக்காக ஒதுக்கப்பட்டமை ஒரு தனிச் சம்பவம் அல்ல. நுவரெலியா அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதி. எதிர்காலத்தில் நுவரெலியாவில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவும் எதிர்பார்ப்பும் எங்களிடம் இருக்கின்றது.
நுவரெலியாவில் இன்னும் பல பாரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் நுவரெலியாவின் சூழலையும் அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களையும் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்றன.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
2024 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.