நுவரெலியாவில் மட்டக்குதிரை தாக்கி சிறுவனுக்கு காயம்!

நுவரெலியா கிரகரி வாவிக்கரையோரத்தில் (28) சனிக்கிழமை மாலை மட்டக்குதிரையொன்று தாக்கியதால் சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நெஞ்சு பகுதியில் ஏற்பட்ட காயத்துடன் அச்சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வருட இறுதி என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவிற்கு வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வகை தந்த உள்நாட்டு சுற்றுலா பயணிகள் கிரகரி வாவி கரையோர வீதியில் நடந்து சென்ற போது சவாரிக்காக கொண்டு வரப்பட்ட மட்டக்குதிரை ஒன்று திடீரென சிறுவனை தாக்கி காயப்படுத்தியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அதன் பின்னர் குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் இருந்த நுவரெலியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களிடம் முறைப்பாடு செய்து சிறுவனை தாக்கிய மட்டக்குதிரையின் உரிமையாளர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக நுவரெலியாவில் சுற்றி திரியும் மட்டக்குதிரைகள் பிரதான வீதிகளில் தாறுமாறாக ஓடி சுற்றுலா பயணிகளை உதைப்பதும், கடிப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது இதன் காரணமாக நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் .
எனவே வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து மட்டக்குதிரை வளர்ப்போருக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதையும் மீறும் பட்சத்தில் மட்டக்குதிரையை பறிமுதல் செய்து அதிகரித்த தண்டப்பணத்தை விதிக்க வேண்டும் என பொது மக்களும், வாகன சாரதிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Articles

Latest Articles