நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்த இந்திய பிரஜையொருவர் திடீரென நேற்று உயிரிழந்துள்ளார்.
68 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சுற்றுலா பயணி தனது மனைவியுடன் கடந்த 23 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ள நிலையில் , நேற்று நுவரெலியாவிற்கு வந்து மாலை 6:30 மணியளவில் நுவரெலியா பிலக்பூல் விடுதியில் இருந்து பிரதான நகருக்கு இரவு உணவு உண்பதற்காக சென்றுள்ளார்.
அவ்வேளையில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
எனினும், மாரப்படையால் குறித்த இந்திய பிரஜை வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன் மரணித்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணைகளை நுவரெலியா சுற்றுலா பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.