இன்று மதியம் இலங்கை சமாதான பேரவை மற்றும் நுவரெலியா மாவட்ட சர்வமத அமைப்பு நுவரெலியா மாவட்ட தேசிய இளைஞர் பேரவை இணைந்து நுவரெலியா நகரில் சமாதான ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள்.
ஊர்வலத்தின் போது அங்கு உள்ள இஸ்லாமிய பள்ளி, கிறித்தவ தேவாலயம், பௌத்த விகாரை மற்றும் காயத்ரி அம்மன் ஆலயம் ஆகிய வற்றிக்கு சென்று சமய வழிபாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சுமார் 4 மணித்தியாலம் இந்த ஊர்வலம் நடந்தது.
இதற்கு நுவரெலியா பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டதுடன் பாதுகாப்பு வழங்கினர்.
எதிர் வரும் மூன்று நாட்கள் சமாதானம் பற்றிய கலந்துரையாடல் நடைபெற உள்ளது என சர்வமத குழுவின் தலைவர் எமில்திசாநாயக்க தெரிவித்தார்.
