நுவரெலியா மாநரசபை தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

நுவரெலியா மாநகரசபையில் தொழில்புரியும் ஊழியர்களின்  சங்கமான நுவரெலியா ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில்  அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நேற்று(1)ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா நகரில் நடைபெற்றது.

நுவரெலியா கண்டி வீதியில் அமைந்துள்ள பழைய மாநகரசபை கட்டிடத்திற்கு அருகில் ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பித்து கண்டி வீதி, புதியகடை வீதி வழியாக நுவரெலியா பிரதான தபாலகத்திற்கு அருகில் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அங்கிருந்து எலிசபெத் வீதி லோசன் வீதி கண்டி வீதி வழியாக மீண்டும் மாநகரசபை கட்டிடத்திற்கு அருகில் சென்று கலைந்து சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரட்ன, மாநகரசபை உறுப்பினர்களான சுசந்த பலியவர்தன,என். பி. சீ.தயாநாயக்க மற்றும் நுவரெலியா பிரதேசசபை எதிர்கட்சி தலைவர் ருவான் சம்பத் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Latest Articles