‘நுவரெலியா மாவட்ட மரக்கறி விவசாயிகளுக்கு உரம், எரிபொருள் வழங்க ஏற்பாடு’

மயில், குரங்கு உள்ளிட்ட விலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு குறுகிய காலத்தில் பிரயோகரீதியான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக கமத்தொழில் அமைச்சர் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கமத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வனவிலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் தொடர்பில் குழுவில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியயமைக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் உரிய அனைத்துத் தரப்பினர்களினதும் கருத்துக்களை பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்து அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன் சகலரினதும் ஆதரவை தான் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் பயிர் செய்கையில் ஈடுபடும் மரக்கறி விவசாயிகளுக்கு உரம் மற்றும் எரிபொருள் வழங்குவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், விலங்கின நலம்பேணல் சட்டமூலம் தொடர்பிலும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கருத்தில் கொள்ளப்பட்டது.

இதன்போது இந்தச் சட்டமூலம் குறித்த விளக்கம் தேவையென வருகை தந்த உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிறிதொரு தினத்தில் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் குழுக் கூட்டத்தில் குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், இராஜாங்க அமைச்சர்களான டி.பீ. ஹேரத், லசந்த அழகியவண்ண, அனுராத ஜயரத்ன, கௌரவ கனக ஹேரத், காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான உதயகாந்த குணதிலக, சிவஞானம் சிறிதரன், தயாசிறி ஜயசேகர, துமிந்த திசாநாயக்க, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, சந்திம வீரக்கொடி, வ மொஹமட் முஸாமில், குணதிலக ராஜபக்ஷ, தவராசா கலையரசன், வீ. இராதாகிருஷ்ணன், மற்றும் ஜீ. கருணாகரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles