நுவரெலிய அஞ்சல் அலுவலகக் கட்டிடம் மற்றும் காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள அமைச்சரவைத் தீர்மானத்தை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையிலும், புதிய வருமான ஈட்டல்களுக்கு இயலுமை கிட்டும் வகையில் கட்டிடம் மற்றும் காணியை நவீனமயப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.