550திற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான டொக்டர் வாசன் ரத்னசிங்கம் தெரிவிக்கின்றார்.
கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தினால் வரி அறவீடுகள் அதிகரித்துள்ளதை அடுத்து, தொழில் வல்லுநர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இந்த நிலையில், இந்த ஆண்டில் 800ற்கும் அதிகமான வைத்தியர்கள் ஓய்வூ பெற காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
