மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமொன்று நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர், லோவ லோரன்ஸ் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
சங்கர் என்றழைக்கப்படும் திருக்கேதீஸ்வரன் என்பவரே, வீட்டிலிருந்து சுமார் 150 மீற்றல் தொலைவிலுள்ள பலா மரத்தில் தூக்கிட்டு, இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வீட்டிலிருந்து இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் வெளியில் சென்றுள்ளார் எனவும், அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்தே அவர் உயிரிழந்துள்ள சம்பவம் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இது தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்டவரின் சட்டைப் பையில் இருந்து கடிதமொன்று மீட்கப்பட்டுள்ளது. ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை, இது நானாக தேடிக்கொண்ட முடிவு’ என எழுதப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ நிருபர்











