நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட நகரங்கள் நாளை 12 ஆம் திகதி நள்ளிரவுடன் மூடப்படவுள்ளன என்று வதந்திகள் பரப்பட்டுவருகின்றன. இதனை நம்ப வேண்டாம். இன்னும் அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை – என்று நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ரவி குழந்தை வேலு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கூறியதாவது,
” நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்களை மூடுவதற்கான தீர்மானம் எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள், நகர வர்த்தக சங்கம் மற்றும் பொலிஸ் நிலையங்களோடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.
கொரோனா வைரஸ் தடுப்பு செயலணியின் தீர்மானத்தின் பிரகாரமே முடிவுகள் எடுக்கப்படும். கடைகளை மூடுவதாக இருந்தால் அது தொடர்பில் உரிய வகையில் அறிவிக்கப்படும். ” – என்றார்.
தகவல் – நீலமேகம் பிரசாந்த்