பசறை நகரில் பாக்கு, மிளகு, கருங்கா என்பவற்றை சேகரிக்கும் வியாபார நிலையம் ஒன்றை உடைத்து 4 லட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான பாக்கு , மிளகு, கருங்கா என்பன களவாடப்பட்டுள்ளன என்று பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை ஹிங்குருகடுவ வீதியில் பொது சந்தைக்கு அருகாமையில் உள்ள வியாபார நிலையம் ஒன்றே இவ்வாறு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா










