பதுளையிலிருந்து தியனகல தோட்டத்திற்கு ஆட்களை ஏற்றிச்சென்ற வேன் ஒன்று பதுளை – பசறை மூன்றாம் கட்டை பகுதியில் வைத்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் வேனின் சாரதியே பரிதாபகரமாக பலியாகியுள்ளார். விபத்து தொடர்பாக பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
