பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட இரு பாடசாலைகளில் உணவு ஒவ்வாமை காரணமாக 17 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பசறை வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
உணவு ஒவ்வாமை காரணமாகவே மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை பசறை வைத்தியசாலையில் பிரதான வைத்தியர் உறுதிப்படுத்தினார்.
நமுனுகுல கனவரெல்ல பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 2 முதல் 5 வரையான வகுப்புகளில் கல்வி பயிலும் 3 மாணவிகளும், 6 மாணவர்களும் மயக்கமுற்ற நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதன்பின்னர் பசறை நகரில் உள்ள ஆரம்ப பிரிவு பாடசாலையொன்றில் தரம் 5 இல் கல்வி பயிலும் 10 வயதுக்குட்பட்ட 8 மாணவர்கள் (4 மாணவிகள், 4 மாணவர்கள்) உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமு தனராஜ்