“அர்ச்சுனா ஒன்றை மறந்துவிட வேண்டாம், நாங்களும் உங்களைப்போல அந்த விளையாட்டுக்களை செய்வோமாக இருந்தால் , உங்களுக்கு ஓடுவதற்கு இடம் போதாது. உங்களின் விளையாட்டு எங்களிடம் எடுபடாது”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு, பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர், ஜனாதிபதியின் யாழ். விஜயம் தொடர்பில் கூறிக்கொண்டிருந்தார்.
இதன்போது அர்ச்சுனா எம்.பி. கருத்து கூற முற்பட்டார். அவருக்கு வாய்ப்பு வழங்க அமைச்சர் சம்மதித்தபோதிலும், அமைச்சரின் உரையில் அர்ச்சுனாவின் பெயர் குறிப்பிடப்படாத காரணத்தால் சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் அதற்கு இடமளிக்கவில்லை.
எதிரணியில் இருந்தபடி அமைச்சரை நோக்கி அர்ச்சுனா எதையோ கூற, அதற்கு பதிலளித்த அமைச்சர்,
“ அர்ச்சுனா, நான் என்ன கூறவந்தேன் என்பதை புரிந்துகொண்டு கதைக்கவும். ஒன்றை மறந்துவிடவேண்டாம், நாங்களும் உங்களைப்போல அந்த விளையாட்டுக்களை எல்லாம் செய்வோமாக இருந்தால், உங்களுக்கு ஓடுவதற்கு இடம்போதாமல் இருக்கும். அதனால் உங்களின் இதை (மரியாதையை) நீங்கள் தக்கவைத்துக்கொள்ளுங்கள்.
எல்லாவற்றையும் எடுத்து முகநூலில் போட்டு எங்களுக்கும் சோ காட்ட முடியும், எனவே, உங்கள் அச்சுறுத்தல், விளையெட்டெல்லாம் எங்களிடம் எடுபடாது.
எதிர்க்கட்சித் தலைவரிடம் பேசி, நேரத்தை பெற்றுக்கொள்ள உங்களால் முடியவில்லை.” என்றார்.










