வரவு – செலவுத் திட்டம்மீதான வாக்கெடுப்பின்போது அதற்கு எதிராக வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
அத்துடன், முக்கியமான சில திருத்தங்களை முன்வைப்பதற்கும், அவை ஏற்றுக்கொள்ளாத பட்சத்திலுமே எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நேற்று முன்வைக்கப்பட்டது. 2ஆம் வாசிப்புமீதூன விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஒருவர் விவாதத்தை ஆரம்பித்து, கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தவுள்ளார்.
பட்ஜட் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும் விரைவில் தெரியப்படுத்தப்படவுள்ளது.
அதேவேளை, பட்ஜட்டுக்கு எதிராக வாக்களிக்கும் நிலைப்பாட்டிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளது. அரச பங்காளிக்கட்சியான இ.தொ.கா. ஆதரித்து வாக்களிக்கும் என கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.