பட்டு வேட்டியணிந்து யாழில் களமிறங்கிய சீன தூதரக அதிகாரி

சீன தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தமிழர்களின் கலாசார உடையான பட்டு வேட்டியுடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தது அங்கிருப்பவர்களை கவர்ந்தது.

யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதித் தூதர் ஹு வெய், சீனத்துதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட மூவர் குழுவினரே குறித்த விஜயத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அக்குழுவில் அடங்கிய பிரதிநிதி ஒருவரே இவ்வாறு பட்டு வேட்டியுடன் வருகை தந்திருந்தார்.

கடந்த காலத்தில் நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான சீன தூதர் உள்ளிட்ட குழுவினர் பட்டுவேட்டியுடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles