பணயக் கைதியாக பிடிக்கப்பட்ட 4 வயது சிறுமியை விடுவித்தது ஹமாஸ்!

ஹமாஸ் – இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் பிடித்து வைத்திருந்த பிணைக்கைதிகளை விடுத்து வருகிறார்கள்.

நான்கு நாள் போர் நிறுத்தத்தின்போது, ஒவ்வொரு நாளும் 13 இஸ்ரேலியர்கள் என்ற அடிப்படையில் பிணைக்கைதிகளை விடுவிக்கின்றனர். அதேவேளையில் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாட்டினரையும் விடுவித்து வருகின்றனர்.

அந்த வகையில நேற்று 3-வது கட்டமாக 13 இஸ்ரேலியர்கள், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறுமி உள்பட நான்கு வெளிநாட்டினர் என 17 பேரை விடுவித்தது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் 4 வயது சிறுமியின் பெயர் அபிகெய்ல் ஈடன். இவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் குடியுரிமை பெற்றவர்.

கடந்த மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் பயங்ரகவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது, இவரது வீட்டிற்குள் நுழைந்து தந்தை மற்றும் தாயை சுட்டுக் கொன்றுள்ளனர்.

அப்போது பக்கத்து வீட்டில் சென்று தஞ்சம் அடைந்துள்ளார் அபிகெய்ல் ஈடன். பக்கத்து வீட்டிற்குள்ளும் நுழைந்த பயங்கரவாதிகள் அந்த குடும்பத்துடன் இவரையும் சேர்த்து பிணைக்கைதிகளாக பிடித்துள்ளனர்.

அந்த வீட்டில் இருந்து மூன்று குழந்கைகள், குழந்தைகளின் தாய் மற்றும் ஈடன் ஆகிய ஐந்து பேரும் காணாமல் போனர். பின்னர் பிணைக்கைதிகளை பிடித்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில் அபிகெய்ல் ஈடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles