பண்டமாற்று வர்த்தக முறையின் கீழ் கடனை மீள செலுத்த தயாராகும் அரசாங்கம்

2021 ஆம் ஆண்டில், ஈரானில் இருந்து பெறப்பட்ட எரிபொருளுக்கான பணத்தை மீள செலுத்துவதற்கு பதிலாக, ஈரானுக்கு இலங்கை தேயிலையை ஏற்றுமதி செய்ய  திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஜூலை மாதம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.

ஈரானிடம் இருந்து இலங்கை பெற்ற 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளுக்கான கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி மாதம் ஒன்றுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தேயிலையை ஈரானுக்கு 48 மாதங்களுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பண்டமாற்று வர்த்தக முறையின் கீழ் ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்த தேயிலைக்கு, இலங்கையில் உள்ள தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் பணத்தை செலுத்தவுள்ளது.

மேலும், ஈரானிய தேயிலை இறக்குமதியாளர்கள் ஈரானிய தேசிய எண்ணெய் நிறுவனத்திற்கு ரியால்களில் இது தொடர்பான கொடுப்பனவுகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles