பண்டாரவளையிலிருந்து கடத்தப்பட்ட 2,621 கிலோ கழிவு தேயிலை கம்பளையில் கைப்பற்றல்
பண்டாரவளையிலிருந்து, உடுநுவர அந்தெஸ்ச பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மனித பாவனைக்கு உதவாத 2 ஆயிரத்து 621 கிலோகிராம் கழிவுத் தேயிலையை கம்பளை பிராந்தியத்துக்கு பொறுப்பான விசேட அதிரடிப்படையினர் தவுலகல , கல்போர சந்தியில் வைத்து இன்று (05) அதிகாலை கைப்பற்றியுள்ளனர். அத்துடன், நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
அனுமதி பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட மேற்படி கழிவுத்தேயிலை மனித பாவனைக்கு உதவாதது என சுற்றிவளைப்பினை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர், கைப்பற்றப்பட்ட கழிவுத்தேயிலை கடத்தலுக்கு பயன் படுத்திய லொறியினையும் சட்ட நடவடிக்கைககளுக்காக தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
விசேட அதிரடிப்படையின் கட்டளையதிகாரி சட்டத்தரணி வருண ஜயசுந்தர, பிராந்திய கட்டளை அதிகாரி நிசேத பெர்னாந்து ஆகியோரின் ஆலோசனைக்கமைய அதிரடிப் படையிரிவின் கம்பளை பிராந்திய உதவி கட்டளையிடும் அதிகாரி ரோசன வீதிய பண்டார தலைமையிலான அதிகாரிகளே மேற்படி சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.
