பண்டாரவளை நகரில் கட்டாக்காலி மாடுகளால் மக்களுக்கு அசௌகரியம்

பண்டாரவளை மாநகரின் மத்தியில் திரியும் கட்டாக்காலி மாடுகளால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக பாதசாரிகளும் சாரதிகளும் தெரிவிக்கின்றனர்.

மாநகரின் மத்தியில் ரவுண்டபோட், ஜும்மா மஸ்ஜித் முன்னும் மாநகர சபை வீதி முதல் நலின் பியந்த சூரியகே மைதானம் வரையிலான வீதிகள் மாத்திரமன்றி பிரதான வீதியில் பாதசாரிகள் கடக்கும் வீதிக்கடவையிலும் காலை முதல் மாலை வரை கட்டாக்காலி மாடுகள் இடையூறு விளைவிக்கும் வகையில் சுற்றித்திரிவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகள் விசனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பில் மாநகர சபையினர் உரிய கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களை கண்டுபிடித்து தண்டப்பணம் அறவிட வேண்டுமென எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டாக்காலி மாடுகள் மாநகரசபை முன் வீதியிலிருந்து பள்ளிவாசலுக்கு முன்னுள்ள வீதிக்கடவையினூடாக செல்வதை படத்தில் காணலாம்.

Related Articles

Latest Articles