” பண்டோரா பேப்பர்ஸில் ஏதேனும் இலங்கை அரசியல்வாதிகளின் பெயர் இடம்பெற்றிருந்தால், அவர்கள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு, விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.” -என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், வலுசக்தி அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
வலுசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பண்டோரா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” குறித்த ஆவணத்தில் ஏதேனும் அரசியல்வாதியின் பெயர் இடம்பெற்றிருக்குமானால், அவர்களின் சொத்துகள் தொடர்பிலும், சொத்து திரட்டப்பட்ட வழிமுறைகள் தொடர்பிலும் இலஞ்ச, ஊழயல் ஆணைக்குழு, விசாரணை முன்னெடுக்க வெண்டும்.

ஓய்வுபெற்ற அரசியல்வாதி ஒருவரின் பெயரே அதில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வியாபார குடும்பத்துடன் தொடர்புபட்டவர். அவரைதவிர வேறு அரசியல்வாதிகளில் பெயர் இடம்பெறவில்லை என்றெ தெரியவருகின்றது.
பெயர்கள் பற்றி கதைப்பது முக்கியம் அல்ல. முறைகேடாக சொத்து குவிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.” – என்றார்.










