பதுளை பேருந்து தரிப்பிடத்தில் இபோச பஸ்ஸில் மோதி நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் பதுளை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
55 வயதுடைய ஹப்புவத்த பதுளை பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு காயமடைந்து உள்ளதாக என பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்தின் சாரதி பதுளை பொலிஸார் வினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
