பதுளையில் பாக்கு பறிக்க சென்றவர் மின்சாரம் தாக்கி பலி

பதுளை, புஸ்ஸல்லகொல்ல நுகே சந்தி பகுதியில் உள்ள காணியொன்றில் நேற்று (03) திருட்டு தனமாக பாக்கு பறிக்க சென்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை ஹம்பாவெல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞன், புஸ்ஸல்லகொல்ல பகுதியில் உள்ள பாக்கு தோட்டங்களில், இரவு வேளையில் மற்றுமொரு நபருடன் பாக்கு திருட சென்றுள்ளதாகவும் இருவரும் போதைப் பாவனைக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

திருடர்களிடம் இருந்து பாக்கு மரங்களின் உள்ள பாக்குகளை பாதுக்க பாக்கு மர மின் கம்பி போடப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவருடன் சென்றதாகக் கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த முப்பது வயதுடைய நபரொருவர் இன்று 4ஆம் திகதி காலை பதுளை பொலிஸார் வினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உபுல் சந்தன, பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர ஆகியோரின் பணிப்புரையின் பேரில், தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் தி டி.எம்.ரத்நாயக்க தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles