பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்தென 13ஆம் கட்டை காட்டு பகுதியில் கைக்குண்டுகள் இருப்பதாக பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு தேடுதல் நடத்தியபோது k409 ரக கைக்குண்டு ஒன்றும் 82.2 பிரவுன் ரக கைக்குண்டு ஒன்றுமாக இரண்டு கைக்குண்டுகள் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டடுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக சந்தேக நபர் எவரும் கைது செய்யப்படவில்லை.
கைக்குண்டுகளை செயலிழக்கச் செய்யுமாறு புத்தள விசேட அதிரடிப் படையினருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்ததாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜ்