பனிஸ் வாங்குவதற்காக சூன் பாண் விற்பனை செய்யும் ஆட்டோவுக்கு அருகில் சென்ற நாலரை வயதான பிள்ளையை மது போதையிலிருந்த நபரொருவர் தூக்கி நிலத்தில் அடித்ததால் காயமுற்ற பிள்ளையை தம்புள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தம்புள்ள வைத்திய சாலையில் பிள்ளையை பரிசோதித்த வைத்தியர் இது தொடர்பாக தம்புள்ள வைத்தியசாலை
பொலிசாருக்கு அறிவித்ததை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் சம்பவம் தொடர்பாக 44 வயதான நபரை கைது செய்துள்ளனர்.
பெற்றோர் மற்றும் பிள்ளையின் தாத்தாவுடன் கண்டலம பிரதேசத்திலுள்ள வீட்டில் இருந்தபோது வீதியில் சூன் பான் முச்சக்கர வண்டியின் சத்தம் கேட்டு இந்த பிள்ளை தாத்தாவிடம் பணம் வாங்கிக்கொண்டு வீதியைநோக்கிச் சென்றுள்ளது.
அப்போது மது போதையிலிருந்த நபர் பணம் எங்கிருந்து கிடைத்தது என பிள்ளையிடம் கேட்டு ஒரேயடியாக பிள்ளையை தூக்கி நிலத்தில் அடித்ததாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நம்பரை தம்புள்ள நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்த போது நீதவான திருமதி சமிலா குமாரி ரத்நாயக்க சந்தேக நபரை ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.