பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவணத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கையொப்பமிட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கையை இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.
இதன் ஓர் அங்கமாக இன்று நுவரெலியா, ரிகில்கஸ்கட நகரில் கையெழுத்து திரட்டப்பட்டது. இதன்போதே ஜீவன் தொண்டமான் கையொப்பமிட்டார்.
