பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதான மாணவர்களுக்கு பிணை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவன் உள்ளிட்ட நான்கு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை இன்று (19) வாழைச்சேனை நீதிமன்றில் இடம்பெற்ற போது பிணை வழங்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைவாக, வாழைச்சேனை பொலிஸாரினால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து வாழைச்சேனை நீதவான் M.I.M.ரிஸ்வான் சந்தேகநபர்கள் நால்வருக்கும் பிணை வழங்கினார்.

இந்த வழக்கு மீண்டும் ஜனவரி முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் பாடசாலை மாணவன் உள்ளிட்ட நான்கு பேரும் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles