பயங்கரவாத தடைச்சட்டம் நிச்சயம் நீக்கப்படும்: நீதி அமைச்சர் மீண்டும் உறுதி!

 

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கவேண்டும் என்பதே தமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான ஆரம்பகட்டக் கலந்துரையாடல் நீதி அமைச்சில், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து ஆராய்வதற்காகக் கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அர்ஸகுலரத்ன தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார,

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்பதே தமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் எனச் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று ‘இதற்குப் பதிலாகப் புதிதாகக் கொண்டுவரப்படக்கூடிய சட்டமானது உலகளாவிய பயங்கரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சவால்களுக்குத் திறம்பட முகங்கொடுக்கக்கூடியவகையில் அமையவேண்டும்.

அதேவேளை அச்சட்டம் சர்வதேச நியமங்கள் ஊடாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, எமது நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் என்பவற்றைப் பாதிக்காத வகையிலும் இருக்கவேண்டும்’ எனவும் நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles