கனமழை காரணமாக பராக்கிரம சமுத்திர நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நான்கு வான் கதவுகளும் தலா நான்கு அடிக்கு திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
மகாவலி ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்கள் நீர் மட்டம் உயர்வதால் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கசிவு கதவுகள் திறக்கப்பட்ட போதிலும், பாரிய வெள்ள அபாயம் எதுவும் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடு முழுவதும் உள்ள பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, இலங்கையின் கிழக்கு கடற்கரை வழியாக இன்று காலை நுழைந்ததை அடுத்து, வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.










