பலாங்கொடை, கல்தொட்ட பிரதான வீதியின் நவநெலிய பிரதேசத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மண் மேட்டுடன் பாரிய கற்கள் மற்றும் மரங்களும் வீதியில் விழுந்துள்ளன.
வீதியில் விழுந்துள்ள மண் மேடு , கற்கள் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இப் பிரதேசத்தில் தொடர்ந்து மண் சரிவு ஏற்படுவதால் குறித்த வீதியின் ஊடக ( கல்தொட்ட,தியவின்ன,வேலிஓயா, ஹம்பேகமுவ, தனமல்வில, மொனராகலை ஹம்பன்தோட்ட) பிரதேசங்களுக்கு செல்லும் வாகன சாரதிகள் மிகவும் அச்சத்துடன் செல்வதாகவும் குறித்த வீதியை சரியான முறையில் சீர்திருத்தம் செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறித்த வீதியின் ஊடக பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எம்.எப்.எம். அலி
