பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பல வருடங்களாக கொள்ளை மற்றும் நகைத் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரை பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித்த செனவிரத்ன தலைமையிலான குழுவினர் பசறை நகர் பகுதியில் வைத்து நேற்று (02. 02_2021) கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் கடந்த மாதம் பசறை வீதி, பெல்ஹாதென்ன பகுதியில் அரச நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் பெண்ணொருவரின் கழுத்து மாலையை கொள்ளையிட்டுள்ளனர்.
குறித்த பெண் பசறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெல்லவாய, அட்டாம்பிட்டிய உட்பட பல பகுதிகளில் வங்கி திருட்டு நகைத் திருட்டு ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவர்கள் கொள்ளையிட்ட நகைகளை பதுளையிலுள்ள பல அடகு நிலையங்களில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். அந்நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் ஹாலிஎல, மஹியாங்கன பகுதிகளைச் சேர்ந்த 24,29 வயதுடையவர்களாவர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்தி ராமு தனராஜா
